1947-ஆம் ஆண்டு 11-ஆம் நாள் அழகப்பா கல்லூரி காரைக்குடி மக்கள் கல்வி பெறுவதற்காக வள்ளல் அழகப்பர் அவர்களால் தொடங்கப் பெற்றது. அந்நாளைய கல்வி அமைச்சர் திரு.டி.எல்.அவினாசிலிங்கம் செட்டியார் காந்தி மாளிகையில் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். அவ்வருடம் நவம்பர் மாதம் 26ஆம் நாள் மாநில அரசு 664 ஏக்கர் தரிசு நிலத்தை கல்லூரிக்கு வழங்கியது. கலைப்பாடங்களோடு தொடங்கப்பட்ட கல்லூரிக்கு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் ஆகிய இளநிலை அறிவியல் பாட வகுப்புகளுக்கான பல்கலைக்கழக இணைப்பு அறிவியல் பாட வகுப்புகளுக்கான பல்கலைக்கழக இணைப்பு 1948-ஆம் ஆண்டு சூன் மாதம் கிடைக்கப்பெற்றது. அவ்வருடமே சூலை 4-ஆம் நாள் அந்நாளைய முதலமைச்சர் திரு.ஒ.பி.ராமசாமி ரெட்டியார் கல்லூரியின் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
 
     
  • Civil Services Examination Coaching class
    Interested Final year 2013-14 UG & PG students can come and join in this free coaching class and make use of this opportunity.

வள்ளல் அழகப்பர் வாழ்த்து

கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
               வீடும் கொடுத்த விழுத்தெய்வம் - தேடியும்
அள்ளிக்கொடுத்த அழகன் அறிவூட்டும்
               வெள்ளி விளக்கே விளக்கு.

- முனைவர் வ.சுப.மாணிக்கனார்.

 

முன்பெருந் தவத்தால் தோன்றி
               முயன்றெமை காக்கும் வள்ளல்
அன்பினால் அழகப் பாவின்
               அறம்பணி போற்றி செய்வோம்.

- பேராசிரியர் க.தேசிகனார்.