Untitled Document

  College Histroy  
 

1947-ஆம் ஆண்டு 11-ஆம் நாள் அழகப்பா கல்லூரி காரைக்குடி மக்கள் கல்வி பெறுவதற்காக வள்ளல் அழகப்பர் அவர்களால் தொடங்கப் பெற்றது. அந்நாளைய கல்வி அமைச்சர் திரு.டி.எல்.அவினாசிலிங்கம் செட்டியார் காந்தி மாளிகையில் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். அவ்வருடம் நவம்பர் மாதம் 26ஆம் நாள் மாநில அரசு 664 ஏக்கர் தரிசு நிலத்தை கல்லூரிக்கு வழங்கியது. கலைப்பாடங்களோடு தொடங்கப்பட்ட கல்லூரிக்கு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் ஆகிய இளநிலை அறிவியல் பாட வகுப்புகளுக்கான பல்கலைக்கழக இணைப்பு அறிவியல் பாட வகுப்புகளுக்கான பல்கலைக்கழக இணைப்பு 1948-ஆம் ஆண்டு சூன் மாதம் கிடைக்கப்பெற்றது. அவ்வருடமே சூலை 4-ஆம் நாள் அந்நாளைய முதலமைச்சர் திரு.ஒ.பி.ராமசாமி ரெட்டியார் கல்லூரியின் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். 1949-ஆம் ஆண்டு மே 20-ஆம் நாள் புவியமைப்பியல் பாடவகுப்பு தொடங்கப்பட்டது. இளங்கலைப் பிரிவில் தமிழ் 1954 - ஆம் ஆண்டும், அரசியல், ஆங்கிலம் ஆகியவை 1957-ஆம் ஆண்டும் தொடங்கப்பெற்றன. 1958-ஆம் ஆண்டு தமிழ் முதுநிலைப் பாடவகுப்பு தொடங்கப்பட்டு. கல்லூரி ஒரு முதுநிலைக் கல்லூரியாக உயர்வு பெற்றது. டாக்டர்.ஏ.எல்.முதலியார் 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் நாள் கல்லூரி நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டாக்டர் மு.வ.தமிழ் முதுநிலைப்பாடக் கட்டிடத்தை 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் நாள் தொடங்கி வைத்தார். 1970-71 ஆம் கல்வியாண்டில் எம்.காம் வகுப்பு தொடங்கப்பெற்றது.

கல்லூரியின் வெள்ளிவிழா 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் நாள் மிகஸ் சிறப்பாக நடைப்பெற்றது. அந்நாளைய இந்தியப் பிரதமர் திருமதி.இந்திராகாந்தி, தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.கே.கே. ஷா, மாநிலக் கல்வி அமைச்சர் நாவலர் திரு.இரா.நெடுஞ்செழியன், மத்திய தொழில் அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருமதி. இந்திராகாந்தி, வள்ளல் அழகப்பரின் சிலையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். இயற்பியல் முதுநிலைப்பாட வகுப்பு 1979 சூன் மாதமும், தமிழில் ஆராய்ச்சிப் பாடவகுப்பு அவ்வருடம் சூலை மாதமும் தொடங்கப்பெற்றன. 1981-ஆம் ஆண்டு சூலையில் கணிதவியல் முதுநிலைப் பாடம் தொடங்கப்பட்டது.

1985-ஆம் ஆண்டு மே மாதம் அழகப்பா கல்லூரியின் முதுநிலை வகுப்புகளோடு அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட இளநிலைப் பாட வகுப்புகள் கொண்ட அழகப்பா அரசு கல்லூரி. அழகப்பா அரசு கலைக் கல்லூரியாகிறது. அழகப்பா அரசு கல்லூரியின் பொன் விழாக் கொண்டாட்டங்கள் 1997-1998 ஆம் ஆண்டுகளில் மிகஸ் சிறப்பாக நடைப்பெற்றன.

1998-1999 ஆம் கல்வியாண்டு முதல் பி.எஸ்ஸி. கணினி அறிவியல், பி.பி.ஏ., பி.ஏ., ஆங்க்கிலம் மற்றும் எம்.எஸ்ஸி., இயற்பியல் ஆகிய புதிய பாடவகுப்புகள் தொடங்கப்பெற்றன.

ஏப்ரல் 2002-இல் தேசிய தரமதிப்பீட்டுக் குழுவினரால் இக்கல்லூரிக்கு பி+ தரம் (முந்தைய ஐந்து நட்சத்திர தரத்திற்கு இணையானது) வழ்ங்கப்பட்டது.

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி 2003-04 ஆம் கல்வியாண்டு முதல் அழகப்பா பல்கலைக் கழக இணைப்பு பெற்றுச் செயல்பட்டு வருகிறது.

2003-04 ஆம் கல்வியாண்டு முதல் எம்.ஏ., வரலாறு., எம்.காம்., மற்றும் எம்.எஸ்ஸி., கணிதம் ஆகிய பாட வகுப்புகள் தொடங்கப்பெற்றன.

2004-05 ஆம் கல்வியாண்டு முதல் எம்.ஏ., தமிழ். 2005-06 ஆம் கல்வியாண்டு முதல் எம்.ஏ., ஆங்கிலம் மற்றும் எம்.எஸ்ஸி., கணினி அறிவியல் ஆகிய புதிய முதுநிலை பாட வகுப்புகளும் தொடங்கப்பெற்றுள்ளன.

2007-08ஆம் கல்வியாண்டில் இளநிலை கணினி பயன்பாட்டில் தொடங்கப்பெற்றது.

2007-08 ஆம் கல்வியாண்டு முதல் இளநிலை வணிகவியல், பி.பி.ஏ., கணினி அறிவியல், கணிதவியல் மற்றும் இயற்பியல் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் அரசு ஆணைக்கிணங்க இரு சுழற்சி முறை பின்பற்றப்படிகிறது.

20-3-2008 முதல் இக் கல்லூரி முதல் நிலைக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

2009 இல் தேசிய ம்றுநிர்ணய தரமதிப்பீட்டுக் குழுவினரால் இக்கல்லூரிக்கு பி (4க்கு 2.77 மதிப்பெண்) தரம் வழ்ங்கப்பட்டது.